எது நடக்க இருக்க இருக்கிறதோ!!!

கீதாசாரம் சிரித்தது
என்னை பார்த்து...
நான் எரித்த சுள்ளிகள்
திடீர் மழையில் அணைந்தது...
நான் வளர்த்த மலர்செடி
சூரை காற்றில் ஒடிந்தது..
என்னுடையவைகள் எல்லாம்
என்னிடம் இருந்து பறிக்கப்பட்டு..
வெறுமையோடும் வேதனையோடும்
நான் தனிமையில்...
விதைப்பது மட்டும்
என் வேலை...
விளைவதும் பதராவதும்
காலத்தின் கட்டாயம்...
மறுமுறையும் பார்த்தேன்
கீதாசாரம் நம்பிக்கையூட்டியது...
எது நடக்க இருக்க இருக்கிறதோ
அது நன்றாகவே நடக்குமென்று..

எழுதியவர் : நிலா தமிழன்... (20-Sep-11, 12:52 am)
சேர்த்தது : john francis
பார்வை : 337

மேலே