நாட்காட்டி

நாட்காட்டி

சுவருக்குச் சித்திரமாய்!
அது இல்லா வீடோ
சத்திரமாய்!

நாட்களின் நிலை பேசி
தன்னிலை அறியாது
கிழிபடுவதற்கென்றே
காத்திருக்கும்
காகிதக் கூட்டம்!

பால் கணக்கு தொட்டு
பண்டக் கணக்கு முட்டும்
கச்சிதமாய் தெரிவிக்கும்
தேர்ந்த கணக்குப் பிள்ளை!

நாட்களின் நாடி பிடித்து
தேதியும் திதியும்
கணித்துக் கூறிடும்
இல்லத்து சோதிடன்!

அட்டையாகிப் போன பின்னும்
கடவுளெனக் கை பிடித்து தேர்வறையில் அம்ர்ந்திருக்கும் மாணவனின் பரீட்சை அட்டை என!

அது கிழித்து வழங்கும் சீட்டைப் பெற்றுக் கொண்டே ஆண்டுகள் தங்கள் செலவுக் கணக்கில்
நாட்களை வரவு வைக்கின்றனவோ?

எழுதியவர் : சு. உமாதேவி (13-Aug-20, 9:22 pm)
Tanglish : naatkaatti
பார்வை : 76

மேலே