பாரதமே

அன்னைப் பாரதத்தின்
மண்ணைக் கைப்பற்ற,
அந்நியர் கூட்டத்துக்கு
அளவில்லா ஆசை,
மாற்றான் தோட்டத்து
மலரின் மணம் மட்டுமே
முகரும் மடையர்களுக்கு,
தோட்டத்தின் மீதே
இப்போது நாட்டம்,
நிழல் கூட மேலே பட
தகுதியில்லாக் கூட்டம்,
நம் தலை மீதே ஆட
அலையாய் அலைகிறது,
அந்த எதிரிகள் கூட்டம்
எந்த திசைச் செல்வதென்று,
நம் படைக் கண்டு
பதறி சிதறியோட,
பாரதமே ஒன்றுபடு,
பகையெல்லாம் வென்று எடு!!!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (15-Aug-20, 1:05 pm)
Tanglish : baarathame
பார்வை : 37

மேலே