துணிவும் அச்சமும்

உச்சி வெயிலில் வேர்த்தொழுக
உப்புச் சுமையை ஏற்றியேதான்
துச்சமாய்த் துன்பம் துடைத்திடவே
துணிந்தே பணியைச் செய்வதெலாம்,
பச்சிளம் பிள்ளையும் பசியாறப்
பொருட்கள் வாங்கிச் சென்றிடத்தான்,
அச்சமும் உண்டு மழைவந்தால்
அந்தப் பிழைப்பும் போய்விடுமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-Aug-20, 6:52 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 126

மேலே