எதிராப்பு

புத்தம் புதிய புதினமது
நித்தம் நினைவில் வசந்தமது

நிழலதுவோ ஒளியன்றி ஒன்றிடாது - ஆனால்
நினைவதுவோ வளியொன்ற வற்றிடாதே

தேடிச்சென்றால் நிலையாது
தேடிவந்தால் குலையாது என்பர்

தேடியதால் ஓடியதுவோ ஒன்றென்னேன்
தேடியதுவோ வாடியதுவாய் ஒன்றிப்போடதேனோ

நிலையாதாயின் நினைவேனோ
நினைவதுவாயின் நிலையாததேனோ

சிறுகூட்டில் சிலைகொண்டபின்
மறுகூட்டில் நிலைகொள்ளலாகுமா

மதிமுகமதுவாயினும் பிறைமறையகமுண்டு
பிறையகமுண்டு மதிமுகமேதுமே

உறங்கியடங்கள் உரக்கலடிக்குமோ
விளக்கெழுவாயின் விளக்கமதுவாகனுமோ

புலராத மலரில்லை
புரியாத வாழ்வில்லை

பிரியத்தால் இகழ்தலில்லை
பிறியத்தால் புகழ்தலில்லை

மதியும்விழியும் ஒற்றர்கள்
புறவொளியன்றி புலர்வதில்லை

வாழ்த்துவது பன்முறை
வளர்வது தலைமுறை. . .

எழுதியவர் : (15-Aug-20, 6:56 pm)
சேர்த்தது : VICTORYSUBIKSHI
பார்வை : 62

மேலே