வெவ்வேல் வெண்பா

நின்றுநின்று நற்றவம் செய்தார்வென் றாரன்று
என்றும் வணங்கித் துதித்தார்குன் றத்தோனை
நின்றுநின்று மேடையில் வேல்வசை பாடுகிறார்
ஒன்றா இழிமனத் தோர் !

நின்றுநின்று நற்றவம் செய்தார்வென் றாரன்று
என்றும் தமிழ்வேளைப் போற்றினர் - குன்றோனை
நின்றுநின்று மேடையில் ஈனவசை பாடுகிறார்
ஒன்றா இழிமனத் தோர் !

வெவ்வேல் பழித்தே உலவாதே வீணில்நீ
செவ்வேல் அழிக்கும் உனை !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Aug-20, 4:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே