கேள்வியும் பதிலும்
-----------------------------------நெய்தல் நாயகி --------------------------------------------------------------------
இன்றிணைந்த ஒரு வாசகரின் கேள்விக்கு நான் சொன்ன பதில் இங்கே
உங்களுக்காகவும் ,,,,
பிரித்து அழுக உங்கள் Pirithu Aluthuga இப்படித்தான் வருது தமிழில்
அழுவனுமா அளுவோம்
நாடென்ன உலகம் கிடக்கிறக்கிடையில் எல்லோரும் அழுதுகிட்டுதான் இருக்காங்க !
தப்பாய் செய்த தட்டச்சும் இப்போதைய நிலைக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது
உயிரைப் பிரித்துத்தானே உறவுகளை அழவிட்டுக் கொண்டிருக்கிறது இந்தக் கொடுநோய் கொரோனா !
அந்தக் காலத்துல கண்ணதாசன் ஒரு பாட்டுப் போட்டாரு
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒருநாளேனும் கவலை மறந்து சிரிக்க மறந்தாய் மானிடனே
அதில் மிக அற்புத வரிகள்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழைஎனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் .....இயற்கை சிரிக்கும் !
நியாயமாக நீங்கள் கேட்க நினைத்த கேள்வி
கரையோரம் பிரித்து எழுதுக
பிரிந்து புறம் சென்று போரிடப் போன காதலன் இன்னும் வரவில்லை என்று
கண்ணீர் வடித்து கடல் கரை ஓரம் (இதை சேர்த்தெழுதி நன்னூல் சூத்திர விதிப்படி
புணர்ச்சி இலக்கணம் சொல்லட்டும் தெரிந்தோர் ) நிற்கிறாள் நெய்தல் நாயகி .
உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன் .
எண்ணி எண்ணிச் சிவந்த தமிழ் நெஞ்சங்கள் ஏதேனும் இதுகுறித்து எண்ணம்
இருப்பின் எடுத்துரைக்கலாம் . கேட்கக் காத்திருக்கிறேன் .