பள்ளி வாழ்வுதனை
கொடிய நோய் கொன்றதே
மாணாக்கரின் இயல்பு வாழ்வதனை ..
வார நாளும் வார இறுதியுமொன்றாகி
எந்நாளும் கசந்து போனதே..
பள்ளி கோடை விடுமுறையது
கொரோனா விடுமுறை ஆனதே..
சுறுசுறுப்பில்லா காலை துவங்கி
முழு நாளும் சோம்பல் தருதே..
பள்ளி வாகனம் காணவிரு
கண்கள் தினம் ஏங்குதே..
பள்ளி வளாகம் போக
மனம் ஏங்கி தவிக்குதே..
தோழியுன் முகம் காணாமல்
தினம் யுகமாய் நகர்கிறதே..
வியர்வை சிந்தி ஆடாத
விளையாட்டு வெறுத்து போனதே..
காணா ஆசானின் பயிர்ப்பு
தொடுபேசியில் தினம் வருதே..
இருந்தும் படித்த பாடங்கள் எல்லாம்
ஏதோ ஒரு குறை தெரிகிறதே..
கொரோனா செய்தி தினம் கேட்டு
கொஞ்சம் மனதில் பயம் கலந்ததே..
இரவு தூக்கம் வராமல்
இரு விழிகள் தவிக்கிறதே..
இறைவா உன்னை தினம் தேடி
நெஞ்சம் உருகி வேண்டுதே..
----------------
சாம்.சரவணன்