குருவிக்கூடு
வீடில்லாத அவன் உச்சியில்
சுட்டெரித்தான் ஆதவன்
மரம் நிழல் குடை பிடிக்க
மனைவி அருகே அமர்ந்தான்
தனயன் அவள் மடியில்
முகத்தை அப்பியது எச்சம்
அண்ணார்ந்து பார்த்தான்
குருவி ஒன்று குஞ்சுகள் ரெண்டு
கிளைக்கூட்டில் ஒரே களேபரம்
அஷ்றப் அலி