சுதந்திரம்
சுதந்திரத்தை பற்றி நாமும் எழுதுவோமே காசா பணமா
சரியான சுதந்திரம் என்பது
மற்றவர்களிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வது என்று தவறாக கற்பிக்கப் பட்டுள்ளீர்கள்
அப்படி தப்பித்து விட்டதாக நினைத்து
தப்பவே முடியாத வலைக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள்
உங்கள் ஒவ்வொரு நாளையும் வேறு ஒருவரின் கட்டளையின் பேரிலே கடத்துகிறீர்கள்
ஆனால் இன்று நிலமை அதைவிட மோசமாக போய்விட்டது
யார்கட்டளையை ஆமோதிப்பது
காலை எழுந்ததும் கரிவைத்து பல்துலக்கவா இல்லை பற்பசை கொண்டா
தேநீர் அருந்தலாமா கூடாதா
அல்லது அதில் கருப்பட்டி சேர்க்கவா
இல்லை வெள்ளை சர்க்கரை சேர்க்கவா
பழைய சாதம் சாப்பிடலாமா கூடாதா
சமைத்து மூன்று மணி நேரத்திற்குள் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்ற மற்றொரு கட்டளையும் மனதில் வந்து போகிறது
கனிகளை உணவிற்கு முன் சாப்பிடலாமா அல்லது உணவிற்கு பின் சாப்பிலாமா
அலோபதியா ஆயிர் வேதமா
எப்படி ஆகிவிட்டது உங்கள் தனிமனித சுதந்திரம்
பச்சையாகவே உண்ணுங்கள் ஒருவர்
சூரிய ஒளியில் சிறிது வைத்து பின் உண்ணுங்கள் மற்றொருவர்
நன்றாக சமைத்து உண்ணுங்கள் வேறொருவர்
உங்களின் தினவாழ்க்கையை தீர்மானிக்கும் பொறுப்பை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு
சுதந்திரத்தை பற்றி சிந்திக்கலாமா
ஒரு சேலை எடுத்தால் கூட அக்கா இது நல்லாருக்கா என்று மற்றவரின் ஆசைக்கு விலைபோகும் நீங்கள்
உங்கள் சுதந்திரத்தை நினைத்து வருந்துவது எப்படி சரியாகும்
உங்கள் அழுகைக்கும் சிரிப்புக்குமான திறவுகோலை நீங்கள் உங்கள் வசம் வைத்திருக்கும் போது மட்டுமே தனிமனித சுதந்திரம் சாத்தியம்
ஒவ்வொரு தனிமனித சுதந்திரத்தின்
பிறப்பு ஒரு சமூகத்தின் சுதந்திரம்