அவள் இதழ்களின் தனி அழகு

உந்தன் செவ்விதழ்கொண்டு எனது
கன்னத்தில் ஆசை முத்தம் தந்தாய்
அது மனதில் ஈரமாய்ப் பதிய
நிலைக் கண்ணாடியில் எனது
கன்னத்தைப் பார்த்தேன் அதில்
முத்தம் தந்த 'சாயம்;' ஏதுமிலை
புரிந்தது உந்தன் இதழின் அழகு
அதன் சிவப்பு இயற்கை உனக்களித்த
தனி அழகு தனிப்பெரும் அழகு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Aug-20, 4:57 pm)
பார்வை : 157

மேலே