நட்பு
நட்பு...
அடிசறுக்கும் கணத்தில் கண்முன் வருவது
அடிநுனிவரை அனைத்தும் தருவது
ஆயிரம் இருந்தாலும் அக்கறை அழியாது
ஆலமரம் நினைத்தாலும் நட்பின் நிழல் பொழியாது
இன்றோடு நிற்காது நட்பின் பந்தம்
ஈகைக்கு நண்பன் மட்டுமே சொந்தம்
இணைந்து பிறக்காத உறவுக் கற்பு
ஈசல் வாழ்கை வாழாது அவன் நட்பு
உடும்பைப் போல் விடாமல் பிடித்துக்கொள்ளும் சினேகம்
ஊர்சுற்றி தீராமல் பேசுவது
நட்பின் தாகம்
உதவிக்கு உளமாற நன்றி சொன்னால் உறுத்தலாக நினைப்பான்
ஊசிப்போன உணவு தந்தாலும் உண்ணாவிரதம் கலைப்பான்
எதுவாயினும் பகிர்ந்து கொள்வதே நட்பின் தர்மம்
ஏழு பிறவியும் தொடரும் அவன் உறவின் மர்மம்
ஐயம் விளையாத நட்பு வாசப்படும்
ஐநா சபையிலும் அதைப்பற்றி பேசப்படும்
நட்பில்லாச் சொர்கம் நரகமாகும்
நட்புள்ள நரகம் கூட நந்தவனமாகும்
-ஜாக்