புன்னகை பட்டிமன்றம்

பட்டிமன்றத்தில்
தித்திப்பு நடுவராக இருந்தால்
தீர்ப்பு உன் புன்னகைக்கே

சிவப்பு நடுவராக இருந்தால்
தீர்ப்பு உன் செவ்விதழ் புன்னகைக்கே

மலர் நடுவராக இருந்தால்
தீர்ப்பு உன் மயக்கும் புன்னகைக்கே

மௌனம் நடுவராக இருந்தால்
தீர்ப்பு உன் காதல் புன்னகைக்கே

மது நடுவராக இருந்தால்
தீர்ப்பு உன் போதை அதரப் புன்னகைக்கே

தேன் பால் எது நடுவராக இருந்தாலும்
தீர்ப்பு உன் மாசிலா வெண்மைப் புன்னகைக்கே

அந்தப் பட்டிமன்றத்தில்
நடுவராக நான் இருந்தால்
முத்தின் அணிக்கு முல்லையின் தோழிக்கு
சித்திரம் நித்தம் செவ்விதழில் வரையும் உன் புன்னகைக்கு
மாறாக வேறொரு தீர்ப்பு நான் எழுதிட முடியுமோ ?

எழுதியவர் : (1-Sep-20, 9:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 119

மேலே