தமிழின் இனிமை -- 1

தமிழ் எந்த வயதில் படித்தாலும் , எந்த வயதினர் படித்தாலும் , எந்த துறையினர் படித்தாலும் , எந்த மக்கள் நடுநிலைமை உள்ளத்தோடு ஆய்ந்து அறிந்தாலும் அள்ள அள்ள , சுவைக்க சுவைக்க , துய்க்க துய்க்க இன்பம் குறையாதது என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது .

* நயாகரா அருவியில் * நல்வரவு *என்று எழுதிவைத்திருப்பதிலிருந்தும் , ஜப்பானிய பல்கலைக்கழகம் டோக்கியோ வில் * யாதும் ஊரே யாவரும் கேளிர் * என்று தமிழில் எழுதி வைத்திருப்பதிலிருந்தும்
இதை நாம் உணர்ந்துகொள்ளலாம் . மார்ட்டின் சைபர் ஸ்மித் என்ற மொழி ஆய்வாளரா தன்னுடைய உலகபுழப்பெற்ற நூல் ஆய்வு ஒன்றில் உலகின் நானூறு பழைய மொழிகளை ஆய்ந்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார் , அதில் ஒவ்வொரு மொழி பற்றியும் ஒரு பத்தி மட்டுமே எழுதியவர் , தமிழ் மொழிக்கும் மட்டும் மூன்று பக்கம் எழுதியுள்ளார் , அதிலும் குறுந்தொகை பாடலான "யாயும் யாவும் யாராகியரோ ,எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் "என்ற பாடலை குறிப்பிட்டுள்ளார் என்பது நமக்கு பெருமைதானே . கிருஸ்தவர்களின் புனிதத்தலமான ஜெருசலேம் அருகில் உள்ள ஒளிவோ மலையில் இயேசுவின் பத்துக்கட்டளைகளையும் தமிழிலும் எழுதிவைத்துள்ளனர் என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும் .

சில தமிழ் சொற்களையும் அதன் பொருளையும் கீழே காண்போம் .

அரி -- காய் கரியை அரி

அறி -- அறிந்து கொள், தெரிந்து கொள்

அறிய -- எல்லோருக்கு தெரிய ,

அரிய -- அரிதாக , rarest

பறி -- பூவை பறி

பரி -- குதிரை

புரவி -- குதிரை , horse ,

வரி -- கோடு , வருமான வரி

வறி -- வறிய மக்கள் , ஏழ்மையான மக்கள்

விலங்கு -- மிருகம் , animals , குற்றவாளியின் கை யில் போடப்படும் விலங்கு

விளங்கு -- புரிதல், புரிந்து கொள்ளுதல், பாட்டை புரிந்து கொள்ளுதல்

கீறி -- நிலங்கீறி முளைக்கும் விதை

கீரி -- ஒரு விலங்கு , கீரிப்பிள்ளை

முலை -- மார்பகம் , Breast

முளை -- விதை முளைத்தல்

ஊன் -- உடம்பு , மெய், யாக்கை , body

ஊண் -- மாமிசம் , meat

நரை -- நரைமுடி , white hair

நறை -- தேன் , Honey

கல் -- கல் - stone , கல் -- கல்வி கற்றல்

கள் -- ஒரு மது வகை -- Toddy

இறத்தல் -- மறைதல் , இறந்து போதல் , death ,

இரத்தல் -- பிச்சை எடுத்தல் , begging

இரக்கம் -- ஈகை குணம் , கருணை குணம் , Kindness

இறக்கம் -- குடல் இறக்கம் , இறங்கி போகுதல் , வாழ்க்கை நிலையில் , செல்வநிலையில் இறக்கம்

இரைப்பை -- உடலின் உறுப்பு , உணவு தாங்கும் பகுதி

இறப்பை -- மறைதல் , death

தறி -- நெசவு நெய்யும் தறி

தரி -- ஆடை அணிதல்

வேலை -- செயல் , நாம் பார்க்கும் வேலை

வேளை -- காலம், காலை வேளை

காலை -- காலம், ஒரு பகலின் காளை பொழுது

காளை -- ஆண் மாடு , பசுவினம் , ஏர் உழ பயன் படும் விலங்கு .

இன்னும் இனிக்கும் ..

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (2-Sep-20, 12:23 pm)
பார்வை : 323

மேலே