அவள்

மழை தீண்ட மிளிரும் கண்ணம் ...
விரல் தீண்ட சிலிர்க்கும் தேகம் ...
தொட்டால் கீறி விடும் புருவம் ....
இரட்டை விரலால் கோதும் கருந்தூரிகை ...

வெள்ளை தீயில் கறுத்த வேள்விழி ...
ரேகைகள் கோலமிடும் பூக்கரம் ...
ஆழியிலே இசைக்கூட்டும் தேன்குரல் ...
முத்தத்தில் சத்தமிடும் செவ்விதழ் ...

செந்தமிழ் விளையாடும் செந்நா ...
ஏனோ என்னை எதிர்நோக்கும் பார்வை ...
நாணத்தில் முக்குளிக்கும் பூமுகம் ...
கல்லும் குழையும் மழலை சிரிப்பு ...

நிழல் தீண்ட துடிக்கும் பாதம் ...
அகராதியில் இல்லாத பேரழகு ...
என் இதயத்தை நிறப்பிய உன்னை
என் கவிதைக்குள் நிறப்ப முயன்றேன் , தோற்றே போனேன் !

எதிலிலும் நிறையாதவளாய் ,
என் கனவோரம் புன்னகைத்து நிற்கிறாய் ...
நான் மீண்டும் பிறக்க !!!

எழுதியவர் : மணிகண்டன் (3-Sep-20, 11:35 pm)
சேர்த்தது : மணி ராக்ஸ்
Tanglish : aval
பார்வை : 357

மேலே