சாமியாடி பகுதி 2

பெயர் என்ன சொல்?
சில்லி தாண்டி.
சாமி சிறிதுநேரம் இவனையே குறுகுறுவென பார்க்க சில்லி தாண்டிக்கு என்னமோ போல் இருந்தது.
உன் பேரு சில்லி தாண்டி தானா?
ஆமாம் என்று தயக்கமாக சொன்னான்
உனக்கு குழந்தை இல்லை அதானே பிரச்சனை?
ஆமா.
சிறிது நேர மவுனம் . கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தது சாமி. கண்களை மூடிக்கொண்டே " சில்லி தாண்டி உன் முகத்தில் பொய் தெரியுது .அந்த பத்திரகாளியைப் பாரு .அவதான் உன்னை படைச்சவ .அவ தான் இந்த உலகத்துக்கே தாய் .எத்தனை நூறு வருஷம் ஆனாலும் எப்படி எலும்புகள் அழியாமல் அது எந்த உடம்போட துன்னு காட்டிக் கொடுக்குமோ அப்படித்தான் அவள் படைத்த ஒவ்வொருத்தரையும் காட்டுவா . உன்னையும் அவகாட்டிக் கொடுத்துட்டா. உண்மையைச் சொல் உன் பெயர் என்ன?
மனம் ஆடித்தான் போனது சில்லி தண்டிக்கு. உண்மையைக்கண்டுபிடித்து விட்டாரா இந்த சாமி .பெண் குரல் ஆகத்தான் இருக்கிறது என்று மனம் நினைக்க
ஆமாம் நான் பெண்தான். இங்கே ஆண் பெண் என்ற நினைப்பு உனக்கு எதற்கு ? உண்மையைச் சொல் .உன் பேர் என்ன? என்று அதட்ட லோடு சாமிகேட்க தன்னை அறியாமலேயே அவன் தன் பெயரைச் சொன்னான்.
முரளிதரன்
டாக்டர் முரளிதரன். மனோதத்துவ டாக்டர் இல்லையா?
ஆமாம் சாமி
என்ன டாக்டர்? உங்களுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கே .அப்புறம் எதுக்கு இந்த பொய்? எதுக்கு என்ன பார்க்க வந்தீங்க?
நீங்கதான் சொல்லணும் சாமி. சாமி தான் எல்லாத்தையும் சரியா சொல்லுமாமே. தைரியமாக பேச ஆரம்பித்தார் மனோதத்துவ டாக்டர்.
சொல்லட்டுமா முரளி . இந்த சாமியாடி உண்மையா? பொய்யா? இங்க வர்ற கூட்டம் உங்க மனோதத்துவ மருத்துவமனைக்கு வருவதில்லை. பல பிரச்சினைகள் இங்கே எப்படி தீர்க்கப்படுது? ஏன் இவ்வளவு கூட்டம் போகுது? இதை சொல்றது யாரு? இதை
தெரிஞ்சுக்க வந்தீங்க அப்படித்தானே?
அட சரியா சொல்றீங்க சாமி என்றார் முரளிதரன்.
ஆமாம் முரளி அதான உண்மை.
தன்னை முரளி முரளி என கூப்பிட்ட சாமியின் குரல் தனக்கு பரிச்சயமான தாக இருப்பதாக தோன்ற ஆரம்பித்தது.
பக்கத்தில் இருந்த எடுபிடிகளை பார்த்து நான் இவரோட தனியா பேசணும் .எல்லோரும் உள்ளே போங்க .என்றதும் அனைவரும் கதவை சாத்திக்கொண்டு உள்ளே போனார்கள் . இருவர் மட்டும் தனியாக இருக்க என்ன செய்யப்போகிறது இந்த சாமி? என்று நினைக்க ஆரம்பித்தார் முரளிதரன்.
என்ன முரளி என்னை இந்த கோலத்தில் தெரியலையா?
குரல் கேட்டதாக இருக்கிறது. ஆனா நிச்சயிக்க முடியல..
நீங்க....?
நான்தான் விசாலினி. உங்க கூட மனோதத்துவம் படித்தவ. ஊர் திருச்சி தெரியுதா?
மனோதத்துவம் படிக்க வந்த நீங்க கடைசி வருஷம் படிப்பை முடிக்காம போயிட்டீங்க. அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியலை? ஏன் இந்த கோலம்?
சில நொடிகள் மௌனம் தொடர்ந்தது

தொடரும் பகுதி 3 ல்........

எழுதியவர் : சு.இராமஜோதி (4-Sep-20, 6:25 am)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 61

மேலே