எல்லை தாண்டாதே
எல்லை மீறாத
கடல் அலையின் எழுச்சியை
எல்லோரும் ரசிக்கிறோம்
மகிழ்ச்சியடைகிறோம்..!!
சில சமயங்களில்
ஆர்ப்பரித்து வீசினாலும்
அதன் அழகை ரசிக்கிறோம்.
அதே அலைகள் அதன் எல்லையை
தாண்டி புயலாக மாறி வீசும் போது
அனைவரின் வெறுப்புக்கும் ஆளாகி
தன் மதிப்பை இழந்துவிடும்...!!
அதுபோல் தான்
சில மனிதர்களும்
தன் நிலை எது என்பதை
வகுத்து கொள்ளாமல்
எல்லையை தாண்டி
செய்கின்ற செயல்களுக்கு
மனம் வருந்தி மதிப்பும் இழந்து
தவியாய் தவித்து
மன வருத்தம் கொள்கிறார்கள்...!!
--கோவை சுபா