எதை சார்ந்தது மனிதம்
மனிதனிடத்தில் மனிதம் இருக்கிறதா ?
உலகளவில் மனிதனின் எண்ணிக்கைக்கு பஞ்சமில்லை
அவனின் அடிப்படை குணங்களுக்குத்தான்
அவசியம் ஏற்பட்டிருக்கிறது !
இனம் என்று இவனை ஒருசேர குறிப்பிட முடியாது
இவன் பிரித்து வைத்திருக்கும் விதங்களில்
நாடுகள் , மதங்கள் , மொழிகள் , ஜாதிகள் என்கிற பட்டியல்
நீண்டுகொண்டேதான் இருக்கிறது ...............
இனமே இனத்தை ஏமாற்றுவதும்
மிதிப்பதும் வதைப்பதும் கொல்வதும் என்ற
கொடுமைகள் காலம் காலமாக தொடர்த்துதான் வேதனை .............
அன்பும் அரவணைப்பும் தரவேண்டிய மனிதன்தான்
அடிமைகளையும் அகதிகளையும்
அவதரிக்க வைத்துக்கொண்டிருக்கிறான் ....................
கொள்ளைக்கும் கொள்கைக்கும் என்று
இவன் கொடுக்கும் மனித பலிகள்
எத்தனை எத்தனையோ ..................
பரிவு என்பதை தாண்டி
பணமும் பதவியும் பிரதானமான கொள்கை ஆகிவிட்டதால்
மனிதன் மனித தன்மையை இழந்து மாமாங்கம் ஆகிவிட்டது ...............
அடைந்தது போதாது என்று
அலைச்சலோடு மனிதன் உயிர் அடங்கிப்போகிறது ................
வளர்ந்து செழிக்கவேண்டிய
அன்பு கருணை தோழமை எல்லாம் வறண்டு போனதால்
மனிதனின் மனம் பாலைவனமாகி
பலகாலம் கடந்துவிட்டது ...............
எதை சார்ந்தது மனிதம் தொடரும் .........................