என் துணையே

நான் நினைக்கும் யாதையும்
நீ புரிந்து கொள்ள
நான் என்ன செய்ய வேண்டும்...
நீ நினைக்கும் யாதையும்
நான் புரிந்து கொள்ள
நான் என்ன செய்ய வேண்டும்..
நான் என்ன செய்ய வேண்டும்..
என் துணையே...என் துணையே...

உன் பார்வை பட்டதும்
நீ புரிந்து கொண்டதாய்
என் உள்ளத்திரையில்
நானும் நினைத்தேன்..
நீ விலகி நின்றதும்
நான் தவறு செய்ததாய்
விம்மி விம்மி அழுதேன்..
என் துணையே...என் துணையே...

நீ என்னுள் பாதியென
நான் உன்னுள் பாதியென
நானும் நினைத்து நினைத்து இருந்தேன்..
நானும் சொல்லவில்லை..
நீயும் சொல்லவில்லை..
நான் யாரை குற்றம் சொல்ல..
யாரை குற்றம் சொல்ல...
என் துணையே...என் துணையே...

நீ என்னுள் பாதியென
நினைத்த போதிலும்
சில விருப்பு வெறுப்பு
உன்னுளிருக்கும்..
அதற்கு மறுப்பு சொல்லியே..
உன் உணர்ச்சி கொல்லவே..
நான் சர்வாதிகாரி அல்லவே..
என் துணையே...என் துணையே...

என் ஆசையென்ன வென்று
நீ கேட்க வேண்டுமென
என் மனசு ஏங்கி ஏங்கி தவிக்கும்..
உன் ஆசையென்னவென்று
நான் முதல் கேட்க மறந்து விட்டு
உனை குற்றம் சொல்ல நான் யார்...
என் துணையே...என் துணையே...

நானும் நீயும் எல்லாம்
புரிந்து கொள்ள சிறு ஊடல்
கொண்டு வாழ்வோம்..
அந்த ஊடல் கொல்ல
சிறு கூடல் கொண்டு
நம்முள் நம்மை கலப்போம்...
என் துணையே...என் துணையே...

நான் நினைக்கும் யாதையும்
நீ புரிந்து கொள்ள
நான் என்ன செய்ய வேண்டும்...
நீ நினைக்கும் யாதையும்
நான் புரிந்து கொள்ள
நான் என்ன செய்ய வேண்டும்..
நான் என்ன செய்ய வேண்டும்..
என் துணையே...என் துணையே...
----------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (7-Sep-20, 11:27 am)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : en thunaiye
பார்வை : 289

மேலே