திருமால் அந்தாதி
திருமால் அந்தாதி
-----------------------------
மூவரும் முதல்வரெனில் மூவருக்கும் அவனே
முதல்வன் நல்ல ருளெல்லாம் நமக்கு
வேண்டாமலே தந்தருளும் அருளாளன் வரதன்
வேண்டியே அன்னவன் தாள் என்றும் துணை
(1 )
துணையும் வினையருக்கும் அருமருந்தும் அவனே
நல்லடியாருக்கு இகபர இன்பம் தந்து
முடிவில் அழிவில்லா வீடும் அளிப்பவன்
படிந்திடுவோம் அண்ணலவன் பதம் பற்றி
(2 )
பற்றுக பற்றற்றான் பாதங்கள் இறுகவே
பிறவிப் பிணியும் பண்ணிய பாவம்போக
எண்ணிய நல்லெண்ணம் எல்லாம் நிறைவேற
எளிதாம் அவன் நாமங்கள் போற்றி
(௩)
போற்றியே வேறு தெய்வங்கள் வேண்டாது
பற்றுவோம் நீயே கதியென்று அவன்தன்
பாதம் பற்றியே பாடிட பாமாலை
பாட்டிற்கு அவனும் இசைந்திடுவான் இனிதே
(4 )
இனியென்றும் இவனே தெய்வமென்று அறிந்தபின்
ஏனினி நமக்கு நோய்த்தரும் தொல்லைகள்
பிணிக்கே அருமருந்து ஆயுதம் ஐந்துடையான்
மணியாம் எங்கள் மாலவன் அவனே
(5 )