மதுவிதழ் மலரவள்

மதுவண்டு சிறகு விரித்து
மலர் மீதமர்ந்து தேனருந்த
மலர்பறிக்க வந்தவள் காத்திருந்தாள்
தேனருந்தி முடித்த வண்டு
நன்றி சொல்லிப் பறந்தது
மலர் பறித்தாள் பின்
மதுவிதழ் மலரவள் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Sep-20, 11:30 am)
பார்வை : 55

மேலே