செவ்விதழ் மௌனம்
உன் செவ்விதழ் மௌனம்
என்னையும் தாக்கி
என் இதயத்தில் இருக்கும்
உன்னையும் தாக்கி விட்டது
உனக்கு என் மீது என்ன கோவம்
உன் திருவாய் மலர்ந்து சொல்
வெள்ளை கொடியுடன் வந்து
விளக்கம் தருகிறேன்...
ஆனால்....
அவசரகதியில் செயல்பட்டு
இளம் தளிர் போல் வளர்ந்து வரும்
நம் காதலின் கால்களை
ஊனமாக்கி விடாதே...!!
--கோவை சுபா