மீண்டும் பிறந்து வா பாரதியே
முண்டாசு கவி பாரதியே
திரும்பி வா !
அச்சமில்லை அச்சமில்லை
என்றாயே!
இன்று அச்சத்தோடு வாழும்
மானிடனை பார்க்க வா !
புதுமைப்பெண்கள் வாழும்
பூமியை பார்க்க வா !
ஆண்மை எதுவென்று கூற
அழியாத தமிழில்;
மீண்டும்
உனை
அர்ப்பணிக்க வா !
இயற்க்கை சக்தியை
அழிக்க துடிக்கும்,
சொற்ப மனிதனை;
உன் கோல் கொண்டடித்து
புத்தி
புகட்ட வா !
பசுமை மாறாதிருக்க;
பஞ்சம் தலைவிரித்து
ஆடாமல் இருக்க;
*மீசை துடிக்கும் பாரதியே*
மீண்டும் இம் மண்ணில்
ஓர் பிறப்பெடுத்து வா !