பாரதியார் நினைவுகள்
பாரதி"யார்" என்ற கேள்வி
பின்னாளில் வரக்கூடாது
என்று எண்ணித்தானோ
சுப்பிரமணி பாரதியை
"பாரதியார்" என்றே
அன்றே அழைத்தார்களோ...!!!
பாரதி"யார்" என்று அறிந்துகொள்ள
அவனது பாப்பா பாட்டு,
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு
கவிதைகளை படித்தால் புரியும்
அவன் "யார்" என்று
தெரிந்துவிடும்...!!
காலங்கள் கடந்தாலும்
புதுமைகள் நிறைந்த
படைப்புகள்தான்
அவனது கவிதைகள்...!!
அன்றும், இன்றும், என்றும்
படித்து மகிழ்வதற்கு ஏற்ற
கவிதைகள்தான்..
மறுப்பார் "யார்"...??
பாரதி...பாரதிதான்...
நூறாண்டுகள் என்ன...
ஆயிரமாயிரம்
ஆண்டுகள் கடந்தாலும்...!!
பாரதி "யார்"...? என்ற
பேச்சுக்கே இடமில்லை
இந்த தரணி உள்ளவரை....
வந்தேமாதரம்..வாழ்க பாரதம்..!!
--கோவை சுபா