நிலாவும் கவிஞனும்

நீல வானில் நிலாவின் உலா
கவிஞன் எண்ணத்தில் தமிழ்
சொற்களின் உலா நிலாவின் உலா
இவன் கற்பனையைத் தூண்டிவிட
நிலவானது இவன் கவிதை
கவிதை நிலவாக -நிலாவுக்கு
வளர்பிறை தேய்பிறை உண்டென்றால்
கவிஞன் நிலவோ என்றும்
தேயா அழகு நிலா
பூரண வெண்ணிலவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Sep-20, 8:37 pm)
பார்வை : 48

மேலே