ஐக்கூ கவிதை
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
*குறுங்கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
ஏரிகள் முழுவதும்
நிரம்பி இருக்கிறது
வீடுகள்
🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕
மாளிகையை கட்டி விட்டு
உறங்குகிறான்
மண் குடிசையில்
🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕
பாட்டி எடுத்தாள்
சுருக்குப்பையிலிருந்து
கைப்பேசி
🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕
சராசரி மனிதர்கள்
ஆற்றின் மீது நடக்கின்றனர்
கோடை காலத்தில்
🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕
மூன்றாம் சிறகில்
பறக்க தொடங்குகிறது
குறுங்கவிதை
*கவிதை ரசிகன்*
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇