குக்கூ கவிதை
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
*குறுங்கவிதை*
படைப்பு: *கவிதை ரசிகன்*
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
தீட்டிய மரத்திலேயே
பதம் பார்க்கிறது
மரங்கொத்தி
💡💡💡💡💡💡💡💡💡💡💡
அந்திமேகம்
சிறுவன் கையில்
பஞ்சுமிட்டாய்
💡💡💡💡💡💡💡💡💡💡💡
இருள்
அழகாக தெரிகிறது
மின்மினி பூச்சி
💡💡💡💡💡💡💡💡💡💡💡
வண்ணப்பொடி விற்று
வாழ்க்கை நடத்துகிறதோ
வண்ணத்துபூச்சி
💡💡💡💡💡💡💡💡💡💡💡
கடித்த வாய்க்கும்
சுகம் தருகிறது
கரும்பு
கவிதை ரசிகன்
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮