ஆசை முகம் காண வேண்டி

அன்பே உன்னை காணும்வரை
நான் காலை உதயத்தை
பார்த்ததே இல்லை...!!

இப்போது எல்லாம்
உன் ஆசை முகத்தை
காண வேண்டி நான்
அதிகம் உறங்குவதில்லை
அப்படியே உறங்கினாலும்..!!

கதிரவன் காலையில்
கண் விழிக்கும் முன்பே
நான் கண் விழித்து உனக்காக
காத்திருக்கிறேன்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Sep-20, 10:17 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 491

மேலே