கைபேசி

கணினியும் கைபேசியும்
நம் நேரத்தை குறைப்பதற்காகவே
உருவாக்கப்பட்டன - ஆனால்
இன்று அதனுள் தான்
புதைந்து கிடக்கின்றோம்...
உணவருந்தும் வேளையிலும்
கைபேசி கையில் இருந்தால்
சாப்பிடும் உணவில் ருசி கூட
சிலருக்கு தெரிவதில்லை...
பசிக்கு சாப்பிட்டதுபோய்
கைபேசி கையிலிருக்கும்வரை சாப்பிடுகிறவர்களே ஏராளம்...
பெரும்பாலானோர்களின் வாழ்வில்
கைபேசியும் ஓர் அங்கம் ஆகிப்போனது...

எழுதியவர் : சிவசங்கரி (18-Sep-20, 12:50 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : kaipesi
பார்வை : 1689

மேலே