வாழ்க்கை என்னும் பயணம்

வாழ்க்கை என்னும் பயணம்
வாழத் தெரியவில்லையா இல்லை வாழும் வழித் தெரியவில்லையா
தெரியவில்லை எனக்கு தனித்திருந்தால் முடிவை எடுத்திருப்பேன்.
குடும்பம் என்னும் சூழலில் அல்லவா மாட்டியுள்ளேன் .
இருப்பத்தில் மகிழ்ச்சி கொள்வோம் என்றால் வாழ தெரியாதவனாகிறேன்
நிறைவாய் வாழ நினைத்தால் அதற்கு வழித் தெரியாமல் தவிக்கின்றேன்
எதற்கும் முடியவில்லை என்று ஓரமாய் உட்காரவும் முடியவில்லை
ஓய்வெடுக்கும் நாள்வரை உழைப்போம் என்ற உறுதி மட்டுமே என்வசம்
எப்படியும் வாழலாம் என்றால் வாழ்ந்து விடலாம்
இப்படித்தான் வாழ வேண்டும் என்பதாலோ என்னவோ
எனக்கு வாழும் வழித் தெரியவில்லை
இப்பிறவிப் பெருங்கடல் நீந்த மட்டும் தானா கரைசேர முடியாதா?

எழுதியவர் : தமயந்தி சுபாஷ்சந்திரன் (21-Sep-20, 6:11 pm)
பார்வை : 64

மேலே