நீலிமா - கூலிமா
ஆத்தா, என்னோட மூத்த பொண்ணு பொறந்து ரண்டு வருசம் ஆகுது. அவ பொறந்த அடுத்த நாளே நம்ம குடும்ப சோதிடர் ஶ்ரீஇஷ்டலிங்க சாஸ்திரியைப் பார்த்தேன். அவ ராசிப்படி அவளுக்கு 'நீலிமா' -ன்னு பேரு வச்சாரு.
@@@@@@@
சரிடா முத்து. 'நீலிமா'வுக்கு என்னடா அர்த்தம்?
@@@@@@@
'நீலிமா' அர்த்தமில்லாத இந்திப் பேருன்னு நம்ம சோதிடரே சொல்லிட்டாரு. அர்த்தமில்லாத இந்திப் பேரை வைக்கிறதுதான் இப்ப நாகரிகம் னு சொன்னாரு. சரி ஆத்தா ரண்டாவது பெண் கொழந்தை பொறந்து நாலு நாள ஆகுது. நம்ம சோதிடரப் பார்த்து கொழந்தை ராசிப்படி பேரு வைக்கச் சொல்லிக் கேக்கணும்.
@@@@@@
அவரை எதுக்குடா பாக்கிற. அர்த்தமில்லாத பேரை வைக்கிறதுதான் தற்கால நாகரிகம்னு சொல்லிட்டாரு.
@@@@@
சரி. என்ன பேரு வைக்கலாம்.
@@@@@@௨
மூத்த பொண்ணு 'நீலிமா' ரண்டாவது பொண்ணுக்கு 'கூலிமா'-ன்னு பேரு வச்சிருடா முத்து
@@@@@@
'கூலிமா' வா? சனங்க இந்தப் பேரைப் பத்தி கிண்டல் பண்ணுவாங்களே.
@@@@@@
'கூலிமா' -இந்திப் பேருன்னு சொல்லுடா முத்து. எல்லாரும் "கூலிமா, சுவீட்டு நேமு"ன்னு சொல்லுவாங்கடா
@@@@@@@
சரி ஆத்தா. நீ சொல்லறபடி உன் ரண்டாவது பேத்தி பேரு 'கூலிமா'. சுவீட்டு நேமு ஆத்தா.
■■■■■■■■■■■■■■■■■■■◆◆◆
Neelima is a meaningless Hindi name