ஹைக்கூ கவிஞர் இரா இரவி
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
கூடுகின்றது சுவை
மழைக்காலம்
தேநீர் !
வாசம் தரும்
எரித்த போதும்
ஊதுபத்தி !
தண்ணீர் தெளிக்கிறான் புல்லுக்கு
மழையில் குடைபிடித்து
மடையன் !
சென்றதில்லை கற்க
செல்கிறேன் கற்பிக்க
கல்லூரிக்கு !
தெரிவதில்லை
இருட்டில்
நிழல் !
ஆபத்து
தலைக்கனம்
தீக்குச்சி !
வழிமாறாமல் வந்துவிடுகின்றன
வருடா வருடம் வேடந்தாங்கல்
அயல்நாட்டுப் பறவைகள் !
இளையோர் முதியோர்
பாகுபாடு இன்றி தொடருது
கொரோனா !
.