பாடகர் - எஸ் பி பாலசுப்ரமணியம்

கவிஞனின் சொற்களுக்கு
இசையால் உடல் கொடுத்தாலும்
உன் குரலால் உயிர் கொடுத்த
பிரம்மா நீ தான்

உன் குரலின் காந்த சக்தியால்
அகிலத்தையே மயக்கியவன் நீ
அனைத்து மொழிகளையும் சிறப்பித்தாயே
உன் அலாதி குரல் வளத்தாலே

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலை சொல் கேளாதோர் - இது பொது மொழி

ஆனால்.....

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
எங்கள் எஸ்பிபி குரல் கேளாதோர் - இது புது மொழி

கொஞ்சும் குரலில் நீ பாடிய
"ஆயர்பாடி மாளிகையில்" பாட்டில்
கிருஷ்ண பகவானே உறங்கி விட்டானே
உன் குரலின் சக்தியை அன்று நான் உணர்ந்தேன்

நீ கொஞ்சி குழைந்து பாடிய
பல பாடல்கள் இன்றும்
எம்மை மெய்சிலிர்க்க வைக்குதையா
அதலிருந்து நாங்கள் இன்னும் மீளவேயில்லை

பூ மனம் படைத்தவன் நீ
உன் பேச்சினில்
கனிவிருக்கும்
அன்பிருக்கும்
மரியாதையிருக்கும்
பக்தியிருக்கும்
மற்றவரை மதிக்கத் தெரிந்த
பண்பிருக்கும்

சாதனை மனிதனாய் நீ இருந்தாலும்
சக ஊழியர்களின் திறமையை பாராட்டத்
தெரிந்த உயர்ந்த மனிதன் நீ

இன்று நீ மௌனமாகி விட்டாய்
ஆனாலும நீ விட்டுச் சென்ற
உன் காந்தர்வக் குரலால்
எங்களை அனுதினமும் உயிர்ப்பித்துக்கொண்டு
இருக்கிறாய் என்பதை நீ அறிவாயா

உன்னோடு ஒன்றாக கலந்து
மானிட இனத்தையே ஆட்டிப் படைத்த
அனைத்து மொழிகளும் இன்று
மௌனமாக உனக்கு அஞ்சலி செலுத்துகிறது

அகிலத்து நாயகனும் அவனது தர்பாரில்
உன் குரலினை கேட்டிடவே உன்னையும்
அழைத்துக் கொண்டானோ

உன் ஆன்மா சாந்தியடைய
அவனே உன்னை பாதுகாக்கட்டும்

உன் பலகோடி ரசிகர்களில் ஒருவன்

ஆனந்த் சுப்ரமணியம்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (25-Sep-20, 8:04 pm)
பார்வை : 322

மேலே