தில்லை அம்பல நடராஜா - மோஹனம்

சௌபாக்கியவதி திரைப்படத்தில் ஜெமினி கணேசன் - சாவித்திரி நடிக்க,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றி, T.M.சௌந்தரராசன் மோகன ராகத்தில் பாடும் அருமையான பாடல் ’தில்லை அம்பல நடராஜா’

கங்கை அணிந்தவா!
கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா!
லிங்கேஸ்வரா!
நின் தாள் துணை நீ தா!
.
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா (தில்லை)

அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வா (அல்லல்)

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
.
எங்கும் இன்பம் விளங்கவே
எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதி (எங்கும்)

எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா.(எளிமை)

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா

பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும் (பலவித)

கலையலங்கார பாண்டிய ராணி நேசா (கலையலங்கார)
மலையின் வாசா! மங்கா மதியானவா (தில்லை)

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Sep-20, 4:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

சிறந்த கட்டுரைகள்

மேலே