காந்தி என்னும் தெய்வம்
குண்டடிபட்டு வீழ்ந்தார் அண்ணல்
காந்தியடிகள் தேசத் தந்தை
அப்போதும் அந்நிலையிலும் அண்ணல்
நாவில் வந்தெழுந்த அந்த
இறுதி வார்த்தை 'ஹே ராம'
கீதையில் கண்ணபெருமான் கூறுவது
' இறக்கும் தருவாயில் ஒருவன்
நாவில் என்நாமம் எழுந்தால்
அவன் என்னையே அடைகின்றான்
என்னோடு கலந்து' அத்தகையோர்
மீண்டும் பிறப்பெடுக்கா அமரராவார்
அத்தகையோருக்கு சிலைவைத்து
கோயில் வைத்து கும்பிடலாம்
தெய்வமாய் என்பர் அறிவுடையார்