நம்பிக்கையில்
உனக்கும் எனக்கும் நடுவே
மெல்லிய திரைதான் என்றே நினைத்து அதை
விலக்க முயற்சித்து விளக்க முயன்றேன்
விளக்கம் தேவையில்லை என்று
விலகி நின்றாய்
நீ முடிவெடுத்தப்பின் என் முயற்சி வீண் என்பது
தெரியாது நானும் திரை விலகும் என்ற
நம்பிக்கையில் இன்னும் காத்து நிற்கின்றேன்