கரிமேடு காமராசர் என்றும் வாழ்வார் கவிஞர் இரா இரவி

கரிமேடு காமராசர் என்றும் வாழ்வார்!

கவிஞர் இரா. இரவிஜான் மோசஸ் என்பது இயற்பெயராக இருந்தாலும்
சனங்களால் கரிமேடு காமராசர் என்றே அழைக்கப்பட்டவர் ! !

.

உடலின் நிறம் தான் அவருக்கு கருப்பு
உள்ளத்தின் நிறமோ என்றும் வெள்ளை!மக்கள் தொண்டராக நாளும் வலம் வந்தவர்
மக்களோடு மக்களாக வாழ்ந்து சிறந்தவர்!கர்மவீரர் காமராசரின் உண்மைத் தொண்டர்
கடைசி மூச்சு உள்ளவரை காமராசரைப் போற்றியவர்!மதசார்பற்ற கட்சியின் மகுடமாக விளங்கியவர்
மதவேறுபாடு இன்றி அன்பாகப் பழகியவர்!நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் தீவிர ரசிகர்
நடிகர்திலகத்தின் பிறந்த நாள் இறந்த நாள் போற்றியவர்!விடுதலைப் போராட்ட வீரர் ஜோசப் சிலையை மதித்தவர்
விடுதலைத் திருநாள் அன்று பூமியில் உதித்தவர்!யார் வந்து உதவி கேட்டாலும் தட்டாமல் செய்தவர்
யாரிடமும் கோபம் கொள்ளாத பண்பாளர்!பச்சைத் துண்டை கர்ணனின் கவசமென அணிந்தவர்
பார்த்தவுடன் முதல் வணக்கம் வைத்தவர்!மதவாதிகளின் மதவெறியை மேடையில் சாடியவர்
மதசார்பற்ற உள்ளத்தை உரமாக வைத்தவர்!பாரதி தேசியப் பேரவை நடத்தி கவிதை வளர்த்தவர்
பார் போற்றும் அறிஞர்களை பேசிட அழைத்தவர்!வளரும் கவிஞர்கள் பலரை வளர்த்து விட்டவர்
வல்லரசுகள் கண்டு அஞ்சாது குரல் கொடுத்தவர்!ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கிக் குரல் தந்தவர்
ஒவ்வொரு நாளும் போராட்டக் களத்தில் நின்றவர்வெற்றி தோல்வி கவலையின்றி தேர்தல்களில் நின்றவர்
வெற்றி கிட்டாவிட்டாலும் மக்கள் பக்கம் நின்றவர்!கரிமேடு காமராசர் பட்டத்திற்கு பொருத்தமானவர்
காமராசர் போலவே தன்னலமின்றி வாழ்ந்தவர்!


உடலால் இந்த உலகை விட்டு மறைந்தாலும்
உன்னத சேவைகளில் வாழ்வார் கரிமேடு காமராசர் !
.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (2-Oct-20, 6:54 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 61

மேலே