அழகியக் காதல்
அழகியக் காதல்
நேரிசை வெண்பா
அழகனுண வில்தாய் குழம்பை பொழிந்து
அழலோ பிசைதலேன் என்றாள் -- குழறும்
மகனறிந்து நேரே வளைகரமார் முன்னேப்
பகரென்றாள் பண்புடைத் தாய்
அழகனுக்கு உணவை பரிமாறியத்தாய் கேட்டாள் மகனே சாதத்தில்
குழம்பை ஊற்றி எவ்வளவு நேரமாகிறது . ஏனிப்படி பிசைந்து கொண்டே
யிருக்கிறாய் குழம்பு இன்னும் சுடுகிறதா என்றாள். சுதாரித்த அழகன்
பதில் சொல்ல நாக்குழறினான் .அதைக்கண்ணுற்ற அவன் தாய்
அவன் மனதில் காதல் என்று தெரிந்து கொண்டாள். நேரிடையாகவே
அவள் யாரடா என்று வெளிப்படையாகவே கேட்டாளாம் பண்புடைத் தாய்.