கள்ளிப்பாலால் போதை
போதை பொருளின் மீது பெருங்காதல் கொள்வோம்
அரசின் போதை பொருளின் மீது மட்டுமே
அடுத்த வேளை உணவின்றி அழும் மிள்ளைகள்பற்றி
அக்கரையின்றி அரசு போதை பொருளை நாடுவோம்
அகிலம் கொல்லும் நோய் அச்சுறுத்திய போதிலும்
அடங்கமறுத்து அரசு போதை பொருளால் மகிழ்வோம்
கையில் காசின்றி கை கால்கள் கடுமையாய் நடுங்க
கள்ளிப்பாலால் போதை எற்றி காலனை அடைவோம்
கொள்ளியின் கனல் குடும்பத்தில் கொப்பளித்தாலும்
கொள்ளையடித்தோ அரசின் கொள்கையை காப்போம்
ஒருவனின் ஊதாரித்தனத்தால் ஊருக்கு ஊறு வந்தாலும்
ஊரில் உள்ள அரசின் உற்சாக பானத்தால் மிதப்போம்
அரசு என்பது அறங்காப்பதற்கு என்பது மறைந்து
அடுத்தடுத்து கடைத்திறந்து அமிலம் விற்பது அவலம்
-------- நன்னாடன்.