தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்

தமிழ் வளர்க்க ஓடிய ஆறுகள்
தாகத்தால் இங்கு தவித்திருக்கு
நீரைக் காக்க நிறைந்த மணல்கள்
நீண்ட வாகன பயணத்தில் இருக்கு
கடுமையாக படித்த மாணவமணிகள்
காரிருள் கொள்கையால் முடங்கியிருக்கு
காக்க வேண்டி மாநில அரசோ
கண்ணாமூச்சு விளையாட்டில் இருக்கு
காரணமில்லா காலி போரட்டத்தை
ஊடக கூட்டங்கள் ஒளி பரப்பிக்கொண்டிருக்கு
உரிமையைக் கேட்க வேண்டிய கூட்டம்
உச்ச போதையில் மதுக்கடையில் இருக்கு
தன்னை இழந்த தமிழர் கூட்டம்
தறுதலையாக மாநிலங்களில் குழுமியிருக்கு
எவையும் எவையாய் இருந்த போதும்
இன்று தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் ( 28.10.2020).
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (28-Oct-20, 7:22 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 187

மேலே