இஷிக்கா - புஷிக்கா

ஏன்டா தம்பி செல்வம், உன் மனைவி தென்றலுக்கு முதல் மகப்பேறுலயே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருக்காங்க. அவுங்களுக்கு என்ன பேருங்கள வச்சிருக்கிற? நல்ல தமிழ்ப் பேருங்கள வச்சிருக்கிறீங்களா?
@@@@@@@@
போங்க அண்ணாச்சி. எனக்கும் தமிழ்ப் பேரு. என் மனைவிக்கும் தமிழ்ப் பேரு. நீங்க கிராமத்தில. நாங்க நகரத்தில. எங்க பாத்தாலும் பசங்களுக்கெல்லாம் சுரேசு, ரமேசு, நரேசு, கணேசுன்னும் பெண் கொழந்தைகளுக்கு 'பிரியா, சுவேதா, ஹேமா'ன்னெல்லாம் பேருங்க. பல்லுப் போன பாட்டியெல்லாம் 'பிரியா' (ப்ரியா) அதனால எங்க பொண்ணுங்களுக்கு தூய இந்திப் பேருங்கள வச்சு தற்கால தமிழர் தன்மானத்தை காப்பாத்திட்டோம்.
@@@@@@@
சரி. கொழந்தைங்க பேரச் சொல்லுடா தம்பி.
@@@@@@@@
ஒரு பொண்ணு பேரு இஷிகா.
@@@@@@
இன்னொரு பொண்ணு பேரு 'பசிக்கா'வா?
@@@@@@
இல்ல அண்ணே. புஷிகா.
#@#####
பரவால்ல பொருத்தம். இசிகா.புசிகா. என்ன பொருத்தம் இந்த பேருப் பொருத்தும். இந்திப் பேருங்க. இந்தில வாழ்த்தறதுதான் நல்லது. இசிகா, புசிகா சிந்தாபாத்து..

எழுதியவர் : மலர் (31-Oct-20, 9:03 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 95

மேலே