நபி நேசம் நம் சுவாசம்
வான்மறை தந்த வள்ளல்
நபியே
இஸ்லாம் தீட்டிய புனித
மொழியே
பாலைவனம் தந்த சோலைவன
சொத்தே
இஸ்லாம் காத்த ஹாஷிம்
குல முத்தே
உங்கள் ஞாபகம் தினமும்
உள்ளத்திலே
நினைவுகளால் இன்ப கண்ணீர்
வெள்ளத்திலே
உலகம் முழுதும் உங்கள்
புகழ்தான்
நல்லுபதேசங்களில் என்றும்
உங்கள் நிழல்தான்
உங்கள் மணத்தால் உலகம்
மணக்குது
உங்கள் நினைவால் உள்ளம்
சிறக்குது
உங்கள் வியர்வை வாசத்திற்கே
பூ மணம் தலைவணங்கும்
உங்கள் பெயர்சொல்லி நாவசைத்தால்
உமிழ்நீர் தேன் இனிக்கும்
நேர்வழி காட்டும் நன்மையின்
பாதை நீங்கள்
நியாயங்களை போற்றும் உலகின்
உண்மையும் நீங்கள்
உங்கள் நெஞ்சம் தழுவி
முத்தமிட வேண்டும்
நபித்துவ முத்திரையை ஒருமுறை
தொட்டுவிட வேண்டும்
சமத்துவம் ஏற்படுத்திய
புனிதரே
சன்மார்க்கம் பரப்பிய
தூதரே
மதினா வரவேண்டும் உங்களை
காண
புனிதம் பெறவேண்டும் கவலைகள்
தீர
உங்களை காணவேண்டும்
யாரசூலல்லாஹ்
எப்போது தீருமோ எந்தன்
ஏக்கம்
நேசத்திலும் சுவாசத்திலும்
நீங்கள்தானே
யாரசூலே யாஹபீபே...