முகநூல் பதிவு 196

உயிர் தந்த பெற்றோர் அறிவேன்....
உறவான உற்றார் அறிவேன்.....

உணர்வு தந்த பிறந்த மண் அறிவேன்...
உயர் செம்மொழி எம் தாய்மொழி அறிவேன்

பெயர் அறிவேன்...
பெயருக்குப் பொருளும் அறிவேன்......

தொழில் அறிவேன்....
தொழில் வழித் தொண்டும் அறிவேன் .......

ஆனால்.....
என்னை மட்டும்
எனக்குள்ளே தேடுகிறேன்.....!

எழுதியவர் : வை.அமுதா (16-Nov-20, 7:44 pm)
பார்வை : 54

மேலே