கம்பீரம் கம்பீரம்
வெற்றியின் பாதை நீ
உன்னோடு நடக்கலாம்
விண்ணுக்கும் படிகள் செய்து
உன் கையால் கொடுக்கலாம்
லட்சியம் நிச்சயம்
தோற்காது
சத்திய வார்த்தைகள்
சாகாது
கம்பீரம் இருக்குதே
கம்பத்தின் கொடிகளை
கிழித்து இறுக்குதே
விவேக சிறகுகளை
விரிக்குதே
வீரமாய் பறக்குதே
தடைகளை உடை(தை)த்த
உன் கால்களுக்கு
தங்க மெடல்களை
பதிக்க தோன்றுதே
முன்னேறி வா
மூழ்காதே
கடலலைகள் பள்ளத்தில்
விழுந்து சாகாதே
வா வா சாதிப்போம்
"உமரின்" வீரம் கூர்வாளே
உரசிட நினைத்தால்
அது போர்வாளே
இரும்பு கூட்டத்தின்
கதவுகளை
எறும்பு கூட்டங்கள்
உடைக்காது
கரும்பு சக்கைகள் பட்டு
இரும்பு கோட்டைகள்
தெறிக்காது
கம்பீரம் கம்பீரம்
முன்னேறு சீக்கிரம்
தள்ளாடும் படகுகளே
கரைசேரும் சீக்கிரம்
வா வா சாதிப்போம்
சாதனைகள் என்னவென்று
கம்பீரமாய் சோதிப்போம்...
இளம் கவியரசு : அப்துல் பாக்கி