அழகன் இவனோ
அழகன் இவனோ?
ஆழ்மனது அறியாமல் தவிக்கிறேன்!
சிறு புன்னகை மட்டும் உன்னிடமிருந்து பிறக்கையில்....
செய்வதறியாது திகைக்கிறேன்!
குளம்புகிறேனடா?
அந்நிமிடம்...!
தித்திக்கும் இனிப்பில்
தேனினிக்கும் சுவையோடு
ஒரு ஆனந்தம்
உனை கண்டபின்பு
எனை பற்றிகொண்ட
நிலையில்.....
பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்!
பார்வை முறித்து செல்லும் முன்பு....
அடுத்த மறுசில நிமிடங்களை...
உன்னுடன்!
அப்போதும்,
விடுகதை புதிராகவே
இதுவரை நீ இன்று!
விடை தெரியாமல்
திணறுகிறேனே?
நான் ஏனென்று...
யாதென்று யாழ்கடலில்
(உன்னுள்) தேடுகையில்...
இதொன்று நிலைமை கூட
இனிதாகாத்தான்
தோன்றுகிறதடா!
இன்றும்.....