இருக்கிறது ஆனால் இல்லை

இருக்கிறது ஆனால் இல்லை

வந்தவர்களுக்கு
பட்டு புடவைகள்
ஏராளமாய் எடுத்து
விரித்து காண்பித்தவன்
தன் மனைவிக்காக
சாதாரண சேலையின்
தொகையை
தவணையாய் பிடித்தம்
செய்ய சொன்னான்
முதலாளியிடம்

பரந்து விரிந்த
கடல் நீருக்கு நடுவே
குடி நீருக்காக
ஏங்கி தவித்தனர்
படகில் இருந்தோர்

உணவருந்த வருபவர்களின்
மனம் நிறைய
விதம் விதமாய்
சமைத்தவன்

தன் வாய் ருசிக்கு
மனைவியின் சமையலை
தேடி ஓடினான்.

இருக்கும் உலகில்
இருப்பவன் எப்பொழுதும்
இல்லாதவனாகத்தான் இருக்கிறான்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Nov-20, 7:21 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 112

மேலே