தூங்கட்டும்

தூங்கட்டும்

நண்பராம் மோசூர் பழனிக்கோர் மின்னஞ்சல்
வேண்ட எடுத்து அனுப்பின உண்மையிது
வேண்டிய சித்தர்கள் பற்றி விவரித்து
ஆண்டமது ரைவானொலி யில்நானே பேசியதாம்

ஆற்றிய சொற்பொழி வின்பதிப்பு தானதுவும்
சாற்றி யதைப்படித்தா ராயில்லை யாயறியேன்
போற்றியொரு கால்போட்டு சொல்ல விழையநானும்
தோற்தோ ழனின்உறக் கம்கலைய வில்லையாம்

உறக்கம் தெளிந்தெ ழவர்மகன் சொல்வார்
கிறக்கமாய் உள்ளேன் விழித்தாரா இல்லை
பறக்கிறது கேள்வி பதிலை அறிய
சிறப்பு விளக்கிடுவா ரென்தோழர் காணோமே

நண்பர் எழுந்ததும் சொல்லும் எழுப்பாதீர்
உண்மை எழுப்பாதீர் இன்னமும் தூங்கட்டும்
உண்ட மயக்கம் எழுப்பாதீர் தூங்கட்டும்
வண்மையாய் சொல்வேன் எழுப்பாதீர் தூங்கவிடே

எனக்கு அவசரமில் லைத்தூங் கவிடும்
மனக்கலக்கம் நீங்கவின்னும் தூங்க விடுவாய்
தினக்களைப்பு நீங்க அயர்நதுதூங் கட்டும்
உனக்குத்தான் சொன்னேன் எழுப்பாதே தூங்கவிடே

எழுதியவர் : பழனிராஜன் (22-Nov-20, 8:35 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே