மருத்துவ வெண்பா – பச்சரிசிக் கஞ்சி - பாடல் 73

நேரிசை வெண்பா

பச்சரிசி நொய்யோடு பச்சைப் பயறிட்ட
இச்சை யுறுங்கஞ்சி யிங்கருந்தக் – கச்சையுறுங்
கொங்கை மடமாதே கூறுகின்ற பித்தம்போம்
சங்கையினி வேறில்லை சாற்று!

- மருத்துவ குண விளக்கம்

குணம்:

பச்சரிசி நொய்யுடன் பச்சைப் பயறிட்டுக் காய்ச்சிய கஞ்சியை உட்கொண்டால் பித்தகோபம் தணியும்.

உபயோகிக்கும் முறை:

இச்செய்யுளில் கூறியபடி பச்சரிசி நொய்யுடன் பச்சைப் பயற்றின் பருப்பைக் கூட்டிக் கஞ்சி செய்து உப்பிட்டுச் சாப்பிட ஆயாசம் தீரும். பித்த பிரகோபம் நீங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Nov-20, 5:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

சிறந்த கட்டுரைகள்

மேலே