மற்றொரு மோகப்பேன்

மனாலம் வைத்த மங்கையே!
மாலை நேரத்தில் வீதி உலாவா?
நசையோடு கணவன் வீட்டிருக்க...
நான்திசை அறியாமல் எங்கு செல்கிறாய்?
(கண்ணீர் தபுதலோடு கூறுகிறாள்)
எம் பந்தத்த்தில்,
போழ்வொன்று வந்தால்...
போரில் மீட்டுக்கொள்ளலாம் என்றிருந்தேனே!
ஆனால்,
வந்ததோ பெண்ருவள்!
அரம்பு சேட்டைகளை அவள் அரங்கேற்ற...
ஆனந்த தாண்டவம் தானென்று...
பொசிவு அடைந்துவிட்டான் போலும்
எம் காந்தன்!
அவள் மேலே...
ஆதலால்,
கருநிலமாய் கிடக்கிறேன்!
நான் கீழே…(படுக்கை அறையில்)
குழிசியில் நீர் நிறையாட...
முடுகாய் விரைந்தோடியதே!
வெள்ளப் பெருக்கொன்று...
எம் கண்களிலிருந்து!
அப்போது;
எண்ணிக் கொண்டேன்!
எழில் மிகுந்த நாட்கள்
இன்று எனை ஏளனம் செய்கிறதோ?
என்றெல்லாம்....
என்ன செய்ய நானும்?
நீறாய் மனம் உடைந்து
விட்ட நிலையில்....
அந்த நீர்க்கடலில் என் தேகம் நனைந்து விட்ட உடையில்...
மிஞிறு கொட்டியதொரு
வலி மட்டும்...
உடம்பில் பாய...
நோனாருக்கு கூட இத்துயரம் வேணாம்
என வேண்டிக்கொண்டுள்ளேன்!
இவ்வாறு,
விடை அறியாத நான்
விதிமாறும் என்ற நோக்கில்
வீதி எதற்கு?
என்று புறப்பட்டுவிட்டேன்!
(என்று உரைத்து விடைபெற்றாள்)
_அம்மங்கை

எழுதியவர் : தியா (30-Nov-20, 9:40 pm)
சேர்த்தது : DHIYA
பார்வை : 382

மேலே