மஞ்சள்பூ புன்னகையை இன்னுமுதிர்

கொஞ்சம் தமிழ்எழுத நான்நினைக்கும் வேளையில்
கொஞ்சும் இளம்புன் னகையில்நீ முன்வந்தாய்
கொஞ்சம் அழகிய புன்னகையை இன்னுமுதிர்
நெஞ்சம் கவிநீரோ டை


கொஞ்சம் தமிழ்எழுத நான்நினைக்கும் வேளையில்
கொஞ்சும் இளம்புன்ன கைவந்தாய்-- மஞ்சள்பூ
கொஞ்சம் அழகிய புன்னகையை இன்னுமுதிர்
நெஞ்சம் கவிநீரோ டை

எழுதியவர் : கவின் சாரலன் (1-Dec-20, 9:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே